பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]

கவனம்

07/10/2025 Sujatha Kameswaran 0

அனைத்திலும் கவனம் தேவை. படிப்பில் கவனம் தேவை. நடத்தையில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. செயல்களில் கவனம் தேவை. எழுத்தில் கவனம் தேவை. செய்கையில் கவனம் தேவை. இருப்பில் கவனம் தேவை. சேர்க்கையில் / சகவாசத்தில் கவனம் தேவை. மனிதர்களுடனான சேர்க்கையிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் கவனம் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக எண்ணங்களில் கவனம் தேவை. ஏனெனில் எண்ணங்களே அனைத்தையும் வழிநடத்துகின்றன. எண்ணங்களே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளன. எண்ணம் […]

சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

லக்ஷ்மீ

04/09/2025 Sujatha Kameswaran 0

திருவே எம் இல்லம் வருவாயே திருமாலின் தேவி திருவே எம் இல்லம் வருவாயே… பங்கஜ லோசனி பரம கல்யாணி (2) பார்வதியே எமை காத்தருள்வாயே (2) எங்கும் நிறைந்த உன் இனிய பொற்பாதம் எங்கள் இல்லங்களில் தங்கிட வேண்டும் (திருவே எம் இல்லம் வருவாயே…) பிள்ளைகள் எத்தனை பிழையது செய்யினும் தள்ளியே வைப்பது தாய் தனக்கழகோ உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம் அள்ளி கொடுத்தருள் வெள்ளிக்கிழமையில் (திருவே எம் இல்லம் […]

கைவைத்தியம் – இயற்கை வைத்தியம்

03/09/2025 Sujatha Kameswaran 0

சில நோய்களை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக இயற்கை முறையில் குணப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, […]

பிள்ளையார் – கணபதி

02/09/2025 Sujatha Kameswaran 0

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குசங்கத்தமிழ் மூன்றும் தா. அல்லல்போம் வல்வினைப்போம்அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாதுயரம்போம் – நல்லகுணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைத்தொழுதக் கால். வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் […]

இயற்கை

25/08/2025 Sujatha Kameswaran 0

எண்ணிறைந்தத் தத்துவங்களைக்கொண்டதாக இயற்கையை இறைவன் அமைத்துள்ளார். குடும்ப அமைப்பு, உணவு முறை, பழக்கவழக்கங்கள் யாவற்றையும் ஓர் நேர்த்தியுடன், அடிப்படை இயல்புப்படி அமைத்துள்ளார். இயற்கையின் சூழலுக்கேற்ப, அச்சூழலைச்சார்ந்த உயிரினங்களையும் படைத்துள்ளார். உதாரணமாக, பனிப்பிரதேசங்களுக்கு ஏற்றார்போல உடலமைப்புடன் உயிரினங்களை உருவாக்கியுள்ளார். மனிதர்களுக்கு, உடலமைப்பு, வீடு, வேலைவாய்ப்பு என தினசரி செயல்களுக்கு ஏற்றார்போலவும், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பனிக்கரடிகள், மாடுகள், ஆடுகள் போன்ற மிருகங்களுக்கு, அப்பனிப்பிரதேசத்தின் குளிரைத் தாங்கிக்கொள்ளும் வண்ணம் உடலமைப்பையும், உணவுமுறைகளையும் அளித்துள்ளார். மேலும், […]

நா-காக்க

01/05/2025 Sujatha Kameswaran 0

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர். இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம். தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம். மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும். உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம். மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை […]

தெரிந்ததும் – தெரியாததும்

15/04/2025 Sujatha Kameswaran 0

1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ? 2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்? 3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்? 4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன? 5. சிரவணம் என்பது என்ன?? பதில்கள் 1: ஆதிசங்கரர் 2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர் 3. பால ஞான பூங்கோதை 4. […]

பெரியபுராணத்தில் ‘வண்ணம்’

06/04/2025 Sujatha Kameswaran 0

பெரியபுராணத்தில் வண்ணங்கள் சேக்கிழார் பெருமான் இறையருளால் இயற்றிய பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், செயற்கரிய செயல்களை பக்தி மற்றும் தொண்டு என்கிற நோக்கில் செய்த நாயன்மார்களின் வாழ்வியலைப்பற்றி உரைக்கும் உன்னத நூலாகும். பெரியபுராணத்தில், இலக்கண இலக்கிய நயம், படிப்போரையும் கேட்போரையும் சிந்திக்கவும் நல்வழிப்படுத்தவும் வைக்கும் நல்கருத்துக்கள் மற்றும் வாழ்வு சீராக்கிக்கொள்ளத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப்பற்றி நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு மூலம் உணர்த்தி வழிநடத்துவது போன்ற சிறப்புகள் […]

1 2 3 33