ஆத்திசூடி
6. ஊக்கமது கைவிடேல் – நற்செயலாற்றும் போது எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மனந்தளரக்கூடாது.
7. எண்ணெழுத்து இகழேல் – கணிதத்தையும், அறநூல்களையும் இகழ்ந்து, கற்காமல்
விடக்கூடாது.
8. ஏற்பது இகழ்ச்சி – பிறரிடம் எதையும் யாசித்து வாழ்வது இழிந்த வாழ்வாகும்.
9. ஐயமிட்டு உண் – பிறர் பசித்திருந்தால், அவர்களுக்கு உணவளித்த பின்பே நாம்
உண்ணவேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு – உலகில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு அவைகளைப் பின்பற்றி வாழவேண்டும்.
Leave a Reply