பஜகோவிந்தம் – 23
யோகியின் அடையாளம்:
ரத்யா கர்ப்பட விரசித கந்த:
புண்யா புண்ய விவர்ஜித பந்த: |
யோகீ யோக நியோஜித சித்த:
ரமதே பாலோந்மத்தவதேவ ||
பதவுரை:
ரத்யா கர்ப்பட விரசித கந்த: – தெருவில் கிடக்கும் கந்தல்
துணியைக் கட்டியிருப்பான்
புண்யா புண்ய விவர்ஜித பந்த: – புண்ணியம், பாபம் இரண்டும் இல்லாத தனி வழியைப் பின்பற்றுவான்
யோகீ – யோகியானவன்
யோக நியோஜித சித்த: – யோகத்தில் இணைக்கப்பட்ட உள்ளத்தையுடைய
ரமதே – (தனக்குத்தானே) மகிழ்ச்சியடைகிறான்
பால உந்மத்தவத் ஏவ – குழந்தை போலவும், பித்தன் போலவும்
கருத்து:
ஆண்டவனிடம் உள்ளத்தைச் செலுத்தி உலகை மறந்த யோகியானவன் தெருவில் கிடக்கும் கந்தல் துணியை அணிந்துகொள்வான். அவன் செயலெல்லாம் புண்ணியமா, பாவமா, ஆசாரமா, அனாசாரமா என்றெல்லாம் நாம் பகுத்தறியமுடியாதபடி ஒரு தனிமுறையாக இருக்கும். அத்தகைய யோகிகள் குழந்தைகள் போலவும் பித்தர்கள் போலவும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என்பதன்மூலம் யோகிகளின் அடையாளங்களை ஆதிசங்கரர் கூறுகிறார்.
Leave a Reply