40-ஆவது சென்னை புத்தக கண்காட்சி
சென்னையில் வருடாவருடம் நடைபெறும் புத்தக கண்காட்சி இவ்வருடம்(2017) ஜனவரி 6-ஆம் தேதி அன்று துவங்க உள்ளது.
பபாசி(BAPASI) என்றழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 40-ஆவது புத்தக கண்காட்சியை இவ்வருடம் சென்னை, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) அமைந்தகரையில் நடத்தவுள்ளது.
நாள்:
ஜனவரி 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை
நேரம்:
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை, மற்ற நாட்களில் மதியம் 2 மணி முதல் 9 மணி வரை
இதனை முன்னிட்டு பல போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பள்ளி மாணவர்களுக்காக திருக்குறள் ஒப்பிவித்தல், பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டியை நடத்துகிறது.
கல்லூரி மாணவர்களுக்காக ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பேச்சுப்போட்டி, சிறுகதை போட்டிகளும் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் வெற்றிபெறுவோர்க்கு தக்க பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பரிசு பெறுவதை காட்டிலும், பங்கேற்பதே முக்கியம்.
போட்டிகளில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 2.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 044-2815 5238, அலைபேசி எண்: 9500566308
Leave a Reply