Articles by Sujatha Kameswaran
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியின் தடங்கல்: செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும். எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (1-2-7) Netungadalum thanneermai kundrum thatindhezhili thaannalgaa dhaaki vitin மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்ப தரிது (1-2-6) Visumpin thuliveezhin allaalmar traange pasumpul thalaikaanba dharidhu வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் தயக்கமும் அச்சமும்: எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நமது ஆழ்மனத்தில் அச்செயலைக்குறித்த ஒரு அச்சம் தோன்றும். இச்செயலை எப்படி செய்வது? என்னென்ன முறைகளைக்கையாளுவது? விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பனபோன்ற எண்ணங்கள் வரும். பெற்றொரோ மற்றொரோ கண்டிக்காத வரை ஒரு குழந்தைக்கு எவ்வித அச்சமும் தயக்கமும் எக்காரியத்தைச் செய்யும்போதும் ஏற்படுவதில்லை. அச்செயல்களில் தோன்றிய விளைவுகளின் அனுபவம் மூலமாகவே அக்குழந்தை அதேசெயலை மீண்டும் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ தீர்மானிக்கிறது. […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (1-2-5) Keduppadhooum Kettaarkkuch Chaarvaaimar traange Etuppadhooum Ellaam Mazhai பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றிகுறித்த மனநிலை: என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற வாக்கின்படி, நாம் எதைக்குறித்து அதிகமாக நினைக்கிறோமோ அதன் சாயல் நம்மிடம் தோன்றும். எனவே நாம் புரியவேண்டிய செயல்கள் பற்றிய அறிவுடன் நம் சிந்தனைகளை அச்செயல்களைக் குறித்து ஒருமுகப்படுத்தவேண்டும். செய்யவேண்டியவைக்குறித்த மனத்தெளிவும், மனத்துணிவும், நம்மை இலக்கின் அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுவிடும். லட்சியப்பாதையில் மனதை நீடிக்கசெய்வதே முதல் காரியம். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, பலன் விரைவில் கிட்டும். நமது விருப்பம், […]