கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

25/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயல்வடிவ கற்பனை: தினமும் நாம் செய்யவேண்டியவைக் குறித்து கற்பனை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக, பாடம் நடத்தவிருக்கும் ஆசிரியர், மாணவர்களின் மனநிலைகுறித்தும், பாடங்களை எவ்வாறு அவர்களுக்கு விளங்கவைக்கலாம் என்பது குறித்தும், ஓர் சிறு கற்பனையுடன், ஓர் மனக்காட்சியுடனேயே வகுப்பிற்கு செல்வார்.  இது எத்தொழிலானாலும் பொருந்தும். செயல்குறித்த அதன் போக்கு மற்றும் விளைவுகள் குறித்த எந்தவொரு கற்பனையும் இல்லாமல் எவராலும் இலக்கை எளிதில் அடைய இயலாது. மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது, உளவியல் ரீதியாக […]

திருக்குறள்

25/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (1-3-3) Irumai vakaidherin dheentuaram poondaar perumai pirangir trulagu பிறப்பு, வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, […]

கொன்றை வேந்தன்

25/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த செயலாகும். 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. அறம் சார்ந்த நல்ல குடும்பவாழ்க்கை இவ்வுலகில் இல்லையெனில், பிற நல்ல அறங்கள் ஏதும் இருக்காது.

எண்ணங்கள் வண்ணங்கள்

24/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணமும் செயலும்: வெற்றியை நோக்கிய பயணத்தில் முதலாவதாக நமது மனதை தயார்ப்படுத்துதல் மிகவும் அவசியம். செயலைக் குறித்தும், அதன் முடிவான வெற்றியைக்குறித்தும், திடமான எண்ணத்தை நம் மனதில் நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ‘எண்ணமே வாழ்வு’, என்பதற்கிணங்க, நமது மனதில் விதைத்த செயலிற்கான எண்ணம், வழிமுறைகள், மற்றும் பல்வேறு நடைமுறைகள் என்பன அவ்விதைக்கு இடப்படும் உரமாகவும், ஊற்றப்படும் நீராகவும் அமைந்து பெரும் பலனளிக்கும். இவ்வாறு எண்ணுவதில், செயலைக்குறித்து எத்தனைமுறை, எத்தனை […]

திருக்குறள்

24/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று (1-3-2) Thurandhaar perumai thunaikkoorin vaiyaththu irandhaarai ennikkon datru பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead

கொன்றை வேந்தன்

24/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே. கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகப் பெருமானின் திருவடியை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் நம்மைப் பெற்ற தாயும் தந்தையும் நாம் முதலில் அறிந்துகொண்டு வணங்கவேண்டிய தெய்வங்கள் ஆவர்.

எண்ணங்கள் வண்ணங்கள்

23/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயலும், பழக்கமும்: நாம் செய்யும் செயல்களில் சில, நாளடைவில் நமக்கு பிடித்தமானதாகின்றன. அவைகளில் பெரும்பாலனவை அன்றாடப்பழக்கமாகின்றன. அவ்வாறு, பழகிய, பழக்கப்பட்ட செயல்கள் நல்ல முன்னேற்றத்தை அடைகின்றன. நன்கு பழகிய இடங்களில் நமது நடவடிக்கைகளுக்கும், சற்றே அறிமுகமான இடங்களில் நாம் செய்யும் செயல்களுக்கும் உண்டான வித்யாசம் போல இதுவும் அமையும். ‘கைவந்த கலை’, என்பதற்கிணங்க நம் பழக்கத்தில் வந்த செயல்களை மேலும் பட்டைத்தீட்டி மெருகேற்றமுடியும். அறிமுக செயல்களே தயக்கமாக […]

ஆத்திசூடி

23/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 106. வேண்டி வினை செயேல்   – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம். 107. வைகறைத் துயில் எழு       – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது. 108. ஒன்னாரைத் தேறேல்          – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே. 109. ஓரம் சொல்லேல்                   […]

1 24 25 26 27 28 33