இந்தியாவின் நிலை!?

26/04/2017 Sujatha Kameswaran 0

அழகிய நிலப்பரப்பு, செழிப்பான வளங்கள் திறமைமிக்க மக்கள் என இவை அனைத்தையும் கொண்டது இந்தியா. ஆனால் இவையெல்லாம் படிக்கவும் பேசவும் இனிமையாய் அமையும் வார்த்தைகள். தலைப்பின் குறிகள் மூலமே இந்தியாவின் நிலையை அறியலாம். ஒன்று, ஆச்சர்யங்களை (நல்ல வகையில்) அழகுடன் விளங்கிய இந்தியா இன்று கேள்விக்குறியுடன் திகழ்கின்றது. இரண்டு, தன்னிகரில்லாமல் நிமிர்ந்த நிலையில் இருந்த இந்தியா இன்று அனைவருக்கும் அனுசரித்து வளைந்து தன்னிலையை கேள்விக்குறியாய் கொண்டுள்ளது. உதாரணமாக, இயல்பான இயற்கையை […]

கண் தானம்

08/02/2017 Sujatha Kameswaran 0

கண் தானம் உடலுறுப்புகளின் தானம் பற்றி எண்ணற்ற செய்திகள் பரவிவருகின்றன. மேலும் அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடந்தவண்ணம் உள்ளன. இவை எல்லாம் மனிதாபிமானத்திற்காகவும், சில புண்ணியத்திற்காகவும், சில பணத்திற்காகவும், மேலும் சில மண்ணிற்கோ, நெருப்பிற்கோ போவது சக உயிரினத்திற்கு பயன்பட்டால் நல்லதுதான் என தத்துவ ரீதியாகவோ செய்யப்படுகின்றன. ஆனால் பக்தியினால் தூய தொண்டுள்ளத்தால் முதன்முதலில் உறுப்பு தானம் பக்தி இலக்கிய காலத்தில்  நடைபெற்றது. உடலுறுப்பு தானம் அதிலும் […]

இருவழியொக்கும் சொல்(Palindrome)

30/01/2017 Sujatha Kameswaran 0

இருவழியொக்கும் சொல் (Palindrome) இருவழியொக்கும் சொல்(Palindrome) என்பது இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வாசித்தால் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். இது மாலைமாற்று என்ற சொல் மூலமும் அறியப்படுகிறது. இதன் ஆங்கிலப்பெயர் Palindrome என்பது கிரேக்க வேர் சொல்லிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில்: level, civic, pop, noon, refer, madam, mam, radar, […]

ஆண்மை-பெண்மை

08/01/2017 Sujatha Kameswaran 2

ஆண்மை-பெண்மை   நம் சமூகத்தில் பொதுவாக ஒரு மனிதனின் இயலாமையைப் பற்றிச் சுட்டிக்காட்ட, நீ ஒரு ஆம்பளையா? ஆம்பளைனா இந்த சவாலை ஏற்றுக்கொள் – என்பனபோன்ற வசனங்களை உபயோகிப்ப்பதுண்டு. இந்த ஆம்பளை, என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு கிடையாதா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் இதோ… ஆண்மை என்பது வீரத்தைக்குறிக்கும். பெண்மை என்பது மென்மையைக்குறிக்கும். ஆண்களுக்கு மட்டுமே வீரம் உரியதென பொருள் கொள்ளலாகாது. சங்க கால முறைப்படி ஆண்களே போரிடச்சென்றனர். அதனாலேயே […]

சென்னை புத்தக கண்காட்சி

01/01/2017 Sujatha Kameswaran 0

40-ஆவது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வருடாவருடம்  நடைபெறும் புத்தக கண்காட்சி இவ்வருடம்(2017) ஜனவரி 6-ஆம் தேதி அன்று துவங்க உள்ளது. பபாசி(BAPASI) என்றழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 40-ஆவது புத்தக கண்காட்சியை இவ்வருடம் சென்னை, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) அமைந்தகரையில் நடத்தவுள்ளது. நாள்: ஜனவரி 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நேரம்: சனி மற்றும் […]

Rs.500,1000 செல்லாது ! ?

08/11/2016 Sujatha Kameswaran 0

500,1000 ரூபாய்கள் செல்லாது ! ? பிரதமர் மோடி அவர்கள் இன்று ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று(8/11/16) நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மற்றிக்கொள்ள இயலும் எனவும் அவரது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஊழலைத் தடுத்தல், கருப்புப்பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என்பன சார்ந்த கொள்கைகளை கையாண்டு இவற்றிற்கு பொதுமக்கள் அனைவரும் […]

1 2 3