கொன்றை வேந்தன்

03/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும். 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.

எண்ணங்கள் வண்ணங்கள்

03/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் திட்டப்பட்டியல்: இலக்கை அடைய,  நிச்சயமான விருப்பத்தை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். நம்மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.  நம் குறிக்கோளினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும். தடைகளை அறிந்துக்கொண்டு அவற்றை நீக்க அல்லது கடந்து வர வழிமுறைகளை வகுக்கவேண்டும்.  இலக்கை சார்ந்த தற்போதைய நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி குறித்தும் கணித்தல் மிக அவசியம். தேவையான மற்ற காரணிகளை, உதவிகளை மற்றும் ஒத்துழைப்பை பட்டியலிடல். இலக்கை நோக்கிய செயல்முறை திட்டமிடல் சாலச்சிறந்தது. குறிக்கோளை அடைய காலவரையறை நிர்ணயத்துக்கொள்ளவேண்டும். மனக்கண்ணோட்டத்தில் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

02/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் குறிப்பெடுத்தலும் திட்டமிடலும்: எந்தவொரு சிறப்பான செயலும், சிறப்பாய் நடந்தேற, அதற்குத் தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்ளுதல் சிறந்த வழிமுறையாகும். பொதுவாக எங்காவது பயணம் மேற்கொள்வதானால், அப்பயணத்திற்குத் தேவையானவை எவை எவை என குறிப்பெடுத்துக்கொண்டு,(check list) அப்பொருட்களை சேகரித்துக்கொண்டு, முடிவில் ஒருமுறை அக்குறிப்பை வைத்துக்கொண்டு, சரிபார்த்துக்கொள்வதன் மூலம், பயணம் இனிதாய் அமையும். பயணத்திற்கே திட்டமிடல், குறிப்பெடுத்தல் அவசியம் எனில், இலட்சியத்தை அடைய, நிச்சயம், நன்றாக, தீவிரமாக குறிப்பெடுத்தல் மிகத்தேவையானது. எண்ணங்கள் தொடரும்… […]

திருக்குறள்

02/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (1-3-10) எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். Andhanar enpor aravormar trevvuyirkkum sendhanmai poontozhuka laan The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness

கொன்றை வேந்தன்

02/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 16. கிட்டாதாயின் வெட்டென மற. நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில் அதனை உடனடியாக மறந்துவிடவேண்டும். 17. கீழோர் ஆயினும் தாழ உரை. நம்மைவிட எளியோர்கள் எனினும், அவர்களிடம் மரியாதையோடு பேச வேண்டும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

01/05/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயல்படுத்தலின் செயல்முறைகள்: முதலில் இலட்சியத்தை சரிவர வரையறுத்துக் கொள்ளவேண்டும். பின்பு, அதனை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். இவற்றிற்கான சாத்தியக்கூறுகளை, கணித்துக்கொள்வதுடன், செய்யவேண்டிய செலவுகள் மற்றும், அதற்குத்தேவையான மற்ற காரணிகளையும் முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. “துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்”. (குறள்- 651) ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும், செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும், என […]

திருக்குறள்

01/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து அவரைக் காத்தல் அரிதாகும். Kunamennum kundreri nindraar veguli kanameyumg kaaththal aridhu The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a […]

கொன்றை வேந்தன்

01/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. கற்பு என்பது, நடத்தைத் தவறாமையாகும். 15. காவல்தானே பாவையர்க்கு அழகு. நல்லொழுக்கம் தவறாமல், தன்னைக் காத்துக்கொள்வது பெண்களுக்கு சிறப்பானதாகும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

30/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இலட்சியத்தை தீர்மானித்தல்: இலட்சியம் எதுவென்று நிச்சயமானால், அதனை அடையும் வழிமுறைகளும் எளிதாகும்.  இலட்சியத்தை நிர்ணயிக்க சிலவற்றை நெறிபடுத்திக்கொள்ளவேண்டும். அவை, 1. சுய விருப்பம், மற்றும் திறமையை அறிதல். 2. மற்றவர் வழிகாட்டுதல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களையே பின்பற்றக்கூடாது. அதாவது, மற்றவர்களுக்காக நாம் வாழலாம், ஆனால் மற்றவர் வாழ்க்கையை நாம் வாழமுடியாது. 3. இலட்சியத்தை அடைய, செய்யவேண்டிய செயல்களையும், அதற்கான செலவுகளையும் திட்டமிடவேண்டும். 4. நம் இலட்சியத்தின் எதிர்கால […]

திருக்குறள்

30/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்(1-3-8) பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். Niraimozhi maandhar perumai nilaththu maraimozhi kaatti vidum The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world

1 21 22 23 24 25 32