ஐம்முகச் சிறப்புக்கள்

சிவபெருமானுக்கு ஐந்து வித முகங்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன.
அவற்றைப்பற்றி ஒரு சிறு அளவில் அறிவோம்.

முகங்கள்                                                        திசை                                                        பஞ்சபூதங்களில்

 

ஈசானம்                                             – மேல் நோக்கிய முகம்                              –   ஆகாயம்

தத்புருஷம்                                      – கிழக்கு நோக்கிய முகம்                          –   நிலம்

சத்யோஜாதம்                                – மேற்கு நோக்கிய முகம்                           –   நெருப்பு

வாமதேவம்                                     – வடக்கு நோக்கிய முகம்                           –   காற்று

அகோரம்                                          – தெற்கு நோக்கிய முகம்                           –    நீர்

 

ஈசான முகம், ஆகாயத்தை நோக்கி அமைந்து, சித்த சக்தியைக் குறிக்கிறது. இப்பரந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான சித்த சக்தியுள்ளது. அதை அறிவதற்காக / உணர்வதற்காக இம்முகம் அமைந்துள்ளது. தத்துவங்களை வெளிப்படுத்தும் சக்தியை அளிக்கும் என உணர்த்துகிறது. மேலும் பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக்குறிப்பதாக அமைந்துள்ள இம்முகமானது விசுக்தி சக்கரத்துடன் தொடர்புடையது.

 

தத்புருஷ முகமானது கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. மேலும் இது குறிக்கோளில் கவனத்தை மொத்தமாக வைப்பதைக் குறிக்கும். மனிதருள் இருக்கும் தெய்விகத்தன்மையை உணர்த்துவதாய் அமைகிறது. குறிக்கோளில் ஸ்திரத்தன்மையை அளிக்கும் விதமாய் உள்ளது. பஞ்சபூதங்களில் நிலத்துடன் தொடர்புடைய இம்முகமானது மூலாதாரச் சக்கரத்துடன் தொடர்புடையது.

 

சத்யோஜாதம் முகமானது, மேற்கு நோக்கி அமைந்து,  உள்ளுணர்வின் சக்தியை குறிப்பதாக உள்ளது. மனத்தின் உணர்வு நெருப்பைத்தூண்டுவதுடன் உடலின் உந்து சக்தியாகிற நெருப்பையும் தூண்டுவதற்கானது. பஞ்சபூதங்களுள் ஒன்றான அக்னி எனும் நெருப்பின் பிரதியாய் அமைந்துள்ள இம்முகமானது, ஆக்கலுக்கான சக்தியை பிரதிபலிப்பதுடன், மணிபுர சக்கரத்துடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது.

 

வாமதேவம் முகமானது, வடக்கு திசை நோக்கியுள்ளது. மேலும் பலத்தையும், அழகையும் குறிப்பதாக அமைந்துள்ளது. சக்தித் தத்துவமாகவும் அமைகிறது. இதற்கான மந்திரங்கங்கள் உள்ளம் மற்றும் உடல் சார்ந்த தளர்ச்சி விஷயங்களை குணமாக்கும் வல்லமைவாய்ந்ததாக அறியப்படுகிறது. பஞ்சபூதங்களுள் வளிமண்டலத்தின் வலிமையை உணர்த்தும் இம்முகமானது அனாஹத சக்கரத்துடன் தொடர்புடையது.

 

அகோரம் முகமானது தென்திசை நோக்கியதாகவும் ஞானசக்தியை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. இது தக்ஷிணாமூர்த்தி அம்சமாகும்.  தீமையை அழிப்பதையும், பல நல்விஷயங்களை தோற்றுவிக்கும் வல்லமையை தெரிவிப்பது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் வலிமையை உணர்த்தும் இம்முகமானது ஸ்வாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்புடையது.

 

இந்த ஐந்து முகங்களைத் தனித்தனியே தொழதும், இவ்வைந்தின் ஒருமித்த முகமான சிவனின் நடராஜ ரூபம் அல்லது லிங்க ரூபத்தைத் தொழுதும் இன்னருள் பெறுவோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*