திருப்பாவை
திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்
திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்
திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந்தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை அங்கண் மாஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கமிருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! […]
திருவெம்பாவை – பாசுரம் – 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். விளக்கம் : மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, […]
திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
Copyright © 2025 | WordPress Theme by MH Themes