திருப்பாவை
திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்
திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்
திருப்பாவை வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் றின்புறுவர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந்தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை அங்கண் மாஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கமிருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்
திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes