லக்ஷ்மீ

04/09/2025 Sujatha Kameswaran 0

திருவே எம் இல்லம் வருவாயே திருமாலின் தேவி திருவே எம் இல்லம் வருவாயே… பங்கஜ லோசனி பரம கல்யாணி (2) பார்வதியே எமை காத்தருள்வாயே (2) எங்கும் நிறைந்த உன் இனிய பொற்பாதம் எங்கள் இல்லங்களில் தங்கிட வேண்டும் (திருவே எம் இல்லம் வருவாயே…) பிள்ளைகள் எத்தனை பிழையது செய்யினும் தள்ளியே வைப்பது தாய் தனக்கழகோ உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம் அள்ளி கொடுத்தருள் வெள்ளிக்கிழமையில் (திருவே எம் இல்லம் […]

திருப்பாவை – பாசுரம் 28

12/01/2021 Sujatha Kameswaran 0

  திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்; அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா, நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

கொன்றை வேந்தன்

07/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை. பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும். 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.