கவனம்

07/10/2025 Sujatha Kameswaran 0

அனைத்திலும் கவனம் தேவை. படிப்பில் கவனம் தேவை. நடத்தையில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. செயல்களில் கவனம் தேவை. எழுத்தில் கவனம் தேவை. செய்கையில் கவனம் தேவை. இருப்பில் கவனம் தேவை. சேர்க்கையில் / சகவாசத்தில் கவனம் தேவை. மனிதர்களுடனான சேர்க்கையிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் கவனம் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக எண்ணங்களில் கவனம் தேவை. ஏனெனில் எண்ணங்களே அனைத்தையும் வழிநடத்துகின்றன. எண்ணங்களே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளன. எண்ணம் […]

சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]