பெண் தெய்வங்கள்; தெய்வப்பெண்கள்

18/03/2025 Sujatha Kameswaran 0

பெண் தெய்வங்களை வழிபடும் முறைமை ஹிந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் சிறப்பம்சமாகும். பலரும் பெண்தெய்வங்களைக் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டுவருகின்றனர். பெண் தெய்வங்களையும், தெய்வப்பெண்களையும் வழிபடுவது ஹிந்து மதத்தின் உயரிய நிலையை உணர்த்துகிறது. பெண் தெய்வங்கள் தெய்வங்களில் பெண்பாலினத்தோர்களே இங்கு பெண் தெய்வங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். உதாரணமாக, பார்வதீ/உமை/சக்தி/அம்மன் – எனப்பல பெயர்களைக்கொண்ட ஈசனின் மனைவி மஹாலக்ஷ்மீ/தாயார்/அம்பாள் – எனப்பல பெயர்களைக்கொண்ட திருமாலின் மனைவி சரஸ்வதீ/வாக்தேவீ/வாணீ – எனப்பல பெயர்களைக்கொண்ட பிரம்மாவின் மனைவி […]

பஜகோவிந்தம் – 8

08/04/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத்                           – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த:                           – விளையாட்டில் […]

தெய்வச் சிலைகள்

02/11/2016 Sujatha Kameswaran 1

தெய்வச்சிலைகள்-தெய்வீகச்சிலைகள் இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமிக்க பல விஷயங்களில் தெய்வச் சிலைகள் பெரும் சிறப்புகள் வாய்ந்தவைகளாகத் திகழ்கின்றன. ஒளி வடிவான இறைவனுக்கு பக்தர்கள் தங்கள் கற்பனைத் திறனாலும், தெய்வத்துடன் நெருக்கமான உணர்வு வேண்டும் என்பதாலும் உருவ அமைப்பை ஏற்படுத்தினர். ஆதி மனிதர்கள் முதலில் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியலாம். சூரியன், அக்னி(நெருப்பு), காற்று, மலை, நீர், பூமி ஆகிய இயற்கையை வழிபட்ட மக்கள், தங்கள் வழிபாட்டின் அடுத்த […]

கொன்றை வேந்தன்

07/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை. ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார். 89. வைகல்தோறும் தெய்வம் தொழு. தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

24/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே. கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகப் பெருமானின் திருவடியை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் நம்மைப் பெற்ற தாயும் தந்தையும் நாம் முதலில் அறிந்துகொண்டு வணங்கவேண்டிய தெய்வங்கள் ஆவர்.