பக்திப் பாடல்கள் – கணேஷ சரணம்…

20/04/2023 Sujatha Kameswaran 0

கணேஷ சரணம் சரணம் கணேஷா மூஷிக வாஹன சரணம் கணேஷா மோதக ஹஸ்தா சரணம் கணேஷா சாமர கர்ணா சரணம் கணேஷா விளம்பித சூத்ரா சரணம் கணேஷா வாமன ரூபா சரணம் கணேஷா மகேஷ்வர புத்ரா சரணம் கணேஷா விக்ன வினாயக சரணம் கணேஷா பாத நமஸ்தே சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா…

ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]

ஐம்பெரும் சபைகள்

31/03/2023 Sujatha Kameswaran 0

சிவபெருமான் தனது நடராஜர் ரூபத்தில் ஒவ்வொரு தலத்திலும் ஒரு வகை நடனம் என ஐந்து தலங்களில், ஆடினார். அவைகள் ஐம்பெரும் சபைகள் (பஞ்ச சபைகள்) என சிறப்புடன் திகழ்கின்றன. நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.  ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.  *1) சிதம்பரம்,* *2) மதுரை,* *3) திருவாலங்காடு,* *4) திருநெல்வேலி,*  *5) குற்றாலம்,* ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே *பொற்சபை, […]

பிரதோஷ வகைகள்

19/03/2023 Sujatha Kameswaran 0

சிவபெருமானை வழிபடுவதற்கு பிரதோஷம் காலம் மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 20 வகையான பிரதோஷங்கள் உள்ளன. 1. தினசரிப் பிரதோஷம் 2. பக்ஷப் பிரதோஷம் 3. மாசப் பிரதோஷம் 4. நக்ஷத்திரப் பிரதோஷம் 5. பூரணப் பிரதோஷம் 6. திவ்யப் பிரதோஷம் 7. தீபப் பிரதோஷம் 8. அபயப் பிரதோஷம் / சப்தரிஷிப் பிரதோஷம் 9. மகாப் பிரதோஷம் 10. உத்தம மகாப் பிரதோஷம் 11. ஏகாக்ஷரப் பிரதோஷம் 12. அர்த்தநாரிப் பிரதோஷம் […]

வாழ்க்கைக் காலம்

22/11/2022 Sujatha Kameswaran 0

வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது. இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது. இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே […]

சிவன் – யோகி

01/06/2022 Sujatha Kameswaran 0

அண்டசராசரங்களில் முதல் யோகி, முதல் புலனடக்க வல்லமையுள்ளவர் சிவன். கழுத்தில் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தாலும், தலையில் கங்கை ப்ரவாகம் செய்துகொண்டிருந்தாலும், நதிக்கரையோ, பனிமலையோ, மயானமோ எவ்விடமாக இருந்தாலும் மன்மதனே வந்து அம்பெய்தினாலும் எதற்கும் அசையாத, தளர்ந்துபோகாத, எதற்கும் தன் யோகநிலை மாறாதவர் சிவன். சஞ்சலத்திற்கோ, சலசலப்பிற்கோ புலன்களை சிதறடிக்காமல், ஏகாக்ர சித்தத்தில் தவம் புரியும் ஆதியோகி சிவன். ஓம் நம சிவாய||

உழைப்பாளர் தின செய்தி

01/05/2022 Sujatha Kameswaran 0

यदि ह्यहं न वर्तेयंजातु कर्मण्यतन्द्रित:।मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्लर सर्वश:।।३:२३उत्सीदेयुरिमे रोका न कुर्यां कर्म चेदहम्।सङ्करस्य च करता स्यामुपहन्यामिमा: प्रजा:।।३:२४ “நான் எப்பொழுதும் அயர்வின்றிச் செயல்களைச் செய்யாமல் போனால், நிச்சயமாக மனிதர்களும் என்னுடைய வழியையே எல்லாவிதத்திலும் பின்பற்றுவர்”“நான் செயல்களைச் செய்யாமல் விட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோகும். மேலும், கலக்கத்திற்கும், குழப்பத்திற்கும் ஜனங்களின் அழிவிற்கும் நானே காரணம் ஆகிவிடுவேன்.” “எனவே நான் எனது கடமை தவறாது செயல்புரியவேண்டும்”என கண்ணன் […]

ஐந்து வகை நமஸ்காரங்கள்

22/12/2021 Sujatha Kameswaran 0

நமஸ்காரம் செய்வது / வணங்குவது எனும் முறையில் ஐந்து விதங்கள் உள்ளன. 1. தலையை மட்டும் குனிந்து வணங்குதல் ‘ஏகாங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஒரு அங்கத்தினால் வணங்குவது. 2. தலைக்குமேல் இருகைகளையும் கூப்பி வணங்குவது, ‘திரியங்க நமஸ்காரம்’ என்பர். மூன்று அங்கங்களால் நமஸ்காரம் செய்வது. 3. இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில்பட வணங்குவது ‘பஞ்ச அங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஐந்து அங்கங்களால் நமஸ்கரிப்பது. 4. […]

ஆலயங்களில் நாகஸ்வரம் வாசிக்கவேண்டியமுறை

26/07/2021 Sujatha Kameswaran 0

ஆலயங்களில் பூஜை நேரங்களில் நாகஸ்வரம் இசைக்கவேண்டிய ராகங்கள்: 1. காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை இசைக்கவேண்டும். 2. இரவுபூஜையின்போது, (அர்த்தஜாம பூஜையில்) ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்கவேண்டும். 3. பூஜை முடிந்து பள்ளியறை சாத்தியதும், பள்ளியறைக்கதவுப்பாட்டை இசைக்கவேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)

எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

1 2 3 4 5 6 32