கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.
கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.
எண்ணங்கள் வண்ணங்கள் திடமுடிவும், விடாமுயற்சியும்: எதை செய்யவேண்டும், எதற்காக செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் என்ற தெளிவுடன் செயல்களை ஆரம்பிக்கவேண்டும். நமது செயல்கள் பற்றிய எண்ணங்களும் அதற்கான தீர்கமான முடிவும், நமதாக இருக்கும் பட்சத்தில், எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும், அவற்றை சரிசெய்ய நம்மால் இயலும். எண்ணியமுடிதல் வேண்டும், நல்லன எண்ணவேண்டும், என்பதுடன், திண்ணிய நெஞ்சமும் வேண்டும். தீர்கமான முடிவுடன், செயலைத்தொடங்கி, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் செயல்கள் தாமதமாகமல் விரைவில் நிறைவுறும். எண்ணங்கள் தொடரும்…
கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.
திருக்குறள் குறள் – 25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (1-3-5) ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவார். Aindhaviththaan aatral akalvisumpu laarkomaan indhirane saalung kari Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him […]
எண்ணங்கள் வண்ணங்கள் சொல்வதும் செய்வதும்: குறிக்கோள் குறித்த எண்ணங்கள் எப்பொழுதும் நம்மைவிட்டு நீங்காமல் இருக்க சில பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும். முதலில் எடுத்த செயலை என்னால் செய்யமுடியும் என்று உள்ளத்திலும் வெளியிலும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளவேண்டும். எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் மிகுந்த சக்தி உண்டு. அதன்படி, நாம் நமக்கு வேண்டியவற்றை மீண்டும் மீண்டும் உரைப்பதனால் அவை நமதாகிவிடும். நமது செயல்களை மேம்படுத்த உதவும். மேலும் அச்செயலகள் குறித்து செய்துபார்த்தல் (கற்பனையாக) செயல்களின் முழுமையை உணரவைக்கும். […]
திருக்குறள் குறள் – 24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (1-3-4) Uranennum thottiyaan oraindhum kaappaan varanennum vaippirkor viththu அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன் He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of […]
கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.
எண்ணங்கள் வண்ணங்கள் செயல்வடிவ கற்பனை: தினமும் நாம் செய்யவேண்டியவைக் குறித்து கற்பனை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக, பாடம் நடத்தவிருக்கும் ஆசிரியர், மாணவர்களின் மனநிலைகுறித்தும், பாடங்களை எவ்வாறு அவர்களுக்கு விளங்கவைக்கலாம் என்பது குறித்தும், ஓர் சிறு கற்பனையுடன், ஓர் மனக்காட்சியுடனேயே வகுப்பிற்கு செல்வார். இது எத்தொழிலானாலும் பொருந்தும். செயல்குறித்த அதன் போக்கு மற்றும் விளைவுகள் குறித்த எந்தவொரு கற்பனையும் இல்லாமல் எவராலும் இலக்கை எளிதில் அடைய இயலாது. மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது, உளவியல் ரீதியாக […]
திருக்குறள் குறள் – 23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (1-3-3) Irumai vakaidherin dheentuaram poondaar perumai pirangir trulagu பிறப்பு, வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, […]
கொன்றை வேந்தன் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த செயலாகும். 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. அறம் சார்ந்த நல்ல குடும்பவாழ்க்கை இவ்வுலகில் இல்லையெனில், பிற நல்ல அறங்கள் ஏதும் இருக்காது.
Copyright © 2025 | WordPress Theme by MH Themes