கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

கொன்றை வேந்தன்

01/06/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. இலவம் பஞ்சு மெத்தையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். 77. மேழிச் செல்வம்படாது. உழவுத் தொழிலால் வரும் செல்வம் ஒருநாளும் அழிந்து போகாது.

கொன்றை வேந்தன்

31/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.

கொன்றை வேந்தன்

30/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 72. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை. முதலில் தோன்றும் மின்னல் எல்லாம், பிறகு மழை பெய்யப் போவதை அறிவிக்கும் அறிகுறியாகும். 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. ஓட்டுனர் இல்லாத கப்பல்/படகு ஒழுங்காக ஓடாது.

கொன்றை வேந்தன்

29/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 70. மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும். 71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.

கொன்றை வேந்தன்

28/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். தீயவை என ஆன்றோர், பெரியோர் கூறிய அனைத்தையும் விலக்கிவிட வேண்டும். 69. போனகம் என்பது தான் உழந்து உண்டல். தனது சொந்த உழைப்பால் பெற்ற ஊதியத்தில் உண்ணும் உணவே சிறந்த உணவாகும்.

கொன்றை வேந்தன்

27/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியாததுபோல் அடங்கி நடப்பதே, பெண்களுக்கு சிறந்த அணிகலனாகும். 67. பையச் சென்றால் வையம் தாங்கும். ஒருவர் கோபமடையாமல், பொறுமையுடன் செயல்பட்டால், அவரை இவ்வுலகம் போற்றும்.

கொன்றை வேந்தன்

26/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். இழிவான, தரக்குறைவான செயல்களைப் புரிபவர்களுக்கு, நற்பண்புகள் இருக்காது. 65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும். தவத்தினால் ஞானம் பெற்றவர்களுக்கு, பகை உணர்வும், கோபமும் இருக்காது.

கொன்றை வேந்தன்

25/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 62. பீரம் பேணி பாரம் தாங்கும். தாயின்பாலை குடித்து வளரும் குழந்தைகள் உடல் பலமும், மனபலமும் கொண்டு விளங்குவார்கள். 63. புலையும் கொலையும் களவும் தவிர். மாமிசத்தை உண்ணுதலையும், கொலை செய்தலையும், திருடுதலையும் போன்ற தீய செயல்களைத் தவிர்க்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.

1 17 18 19 20 21 32