ராகங்களின் பெயர்கள் (ராகங்கள்….பல….)

16/03/2025 Sujatha Kameswaran 0

ராகங்களின் பெயர்கள் (Ragas name in alphabetical order) ——————————————- இசையை இனிமையாக்கத் தோன்றியவைகளே ராகங்கள். பாடலின் வரிகளுக்கேற்பவும், பொருளுக்கேற்பவும் எந்த ராகம் எப்பாடலுக்கு சரியாக இருக்கும் என்பதனை இசைவல்லுனர்கள் அறிவர். அவ்வாறு சரியான ராகத்தில் அமைந்தப் பாடல்கள் என்றென்றும் ரசித்துக்கேட்கத்தூண்டும். ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் ராகங்களின் பெயர்களின் அட்டவணை A – அம்ருதவாகினி, அம்ருதவர்ஷினி, அசாவேரி, அடாணா, ஆபேரி, ஆபோகி, ஆகிரி, ஆனந்தபைரவி, ஆந்தோலிகா, ஆரபி B – […]

ஆலயங்களில் நாகஸ்வரம் வாசிக்கவேண்டியமுறை

26/07/2021 Sujatha Kameswaran 0

ஆலயங்களில் பூஜை நேரங்களில் நாகஸ்வரம் இசைக்கவேண்டிய ராகங்கள்: 1. காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை இசைக்கவேண்டும். 2. இரவுபூஜையின்போது, (அர்த்தஜாம பூஜையில்) ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்கவேண்டும். 3. பூஜை முடிந்து பள்ளியறை சாத்தியதும், பள்ளியறைக்கதவுப்பாட்டை இசைக்கவேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)

கல்யாணம் மற்றும் சுபநிகழ்ச்சி பாடல்கள்

13/10/2019 Sujatha Kameswaran 0

போஜனம் செய்ய வாருங்கள் மீனாட்சி சுந்தரேசர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் நவசித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் வாழைமரத்துடன் வெட்டிவேர் கொழுந்து மாவிலை தோரணம் பவள ஸ்தம்பம் நாட்டிய கூடம், பச்ச மரகதம் பதித்த சுவர்களும் பசும்பொன் தரையில் பலவர்ணப் பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி தூண்கள் தோறும் தூண்டா விளக்கும் சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய பந்தி பந்தியாய் பாயை […]