திருப்பாவை – பாசுரம் 21

05/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 20

04/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! […]

திருவெம்பாவை – பாசுரம் 20

03/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். விளக்கம் : எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் […]

திருவெம்பாவை – பாசுரம் 19

03/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 19 உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம்கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.    – மாணிக்கவாசகர் […]

திருப்பாவை – பாசுரம் 19

03/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ […]

திருவெம்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது […]

திருப்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட, செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் விளக்கம்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை […]

திருவெம்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். விளக்கம் : மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, […]

திருவெம்பாவை – பாசுரம் – 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக் கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! […]

திருப்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   விளக்கம்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான […]

1 6 7 8 9 10 32