திருக்குறள் – கவனக்கப்படவேண்டியவைகள்

27/02/2018 Sujatha Kameswaran 0

திருக்குறள் 1. திருக்குறளில் ‘தமிழ்’, என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. 2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள இருமலர்கள் – அனிச்சம், குவளை 3. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை – குன்றிமணி 4. திருக்குறளில் குறிப்பிடப்படும் இரண்டு மரங்கள் – பனை, மூங்கில் 5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்ணின் பெயர் – ஒன்பது 6. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து – னி (1705 முறை) 7. திருக்குறளில் […]

உரைகல்

23/10/2017 Sujatha Kameswaran 0

‘கல்’ இந்த வார்த்தையை உச்சரித்தால் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் அதன் பல விதங்கள் மற்றும் அதன் பயன்பாட்டினை மனதில் நிறுத்தி உச்சரித்தோம் என்றால்….. உலகில் உள்ள அனைத்திற்கும் ஏதேனும் ஒரு பயன்பாடு உண்டு. பயனற்றது என எதை எடுத்து வைத்தாலும், அது ஒரு காலத்தில் பயனுள்ளதாகவே இருந்துள்ளதை அறியலாம். மேலும், தற்சமயம் பயனற்றது எனக் கருதப்படுவது, பயனற்றது என்பதற்கு உதாரணமாகப் பயன்படுகிறது. ஆகவே எல்லாவற்றிலும் ஒரு பயன் உண்டு. இப்பொழுது […]

முகமூடி மனிதர்கள்

12/09/2017 Sujatha Kameswaran 0

  அனைவருக்கும் முகம் உள்ளது. அதை எல்லோராலும் பார்க்க முடியும். ஆனால் அவர்களுக்குள் ஒளிந்துள்ள இதர முகங்களை யார் அறிவர்?  காலம் உணர்த்தும். நமது உள் முகங்கள் வெளிப்படும்போது, அவற்றைப் பல நேரங்களில் சரியானது என்றும், அவை அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றது என்றும் நாம் நியாயப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், மற்றவர்களின் இந்நிலைப்பாட்டை பெரும்பாலும் நாம் ஏற்றுக்கொள்வதேயில்லை. சில மாற்று முகங்கள் தவிர்க்கமுடியாதது. பச்சிளம் குழந்தைகளிடம் நாம் காட்டும் முகம். குழந்தைகளின் குறும்பு […]

பெற்றோரும், ஆசிரியரும்

06/09/2017 Sujatha Kameswaran 0

நம்மைச் சுற்றியுள்ள இச்சமுதாயத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஓரிருவரைத் தீயோர் என சுட்டிக்காட்டிட முடிந்தது. அவர்களும் சில காரணங்களாலேயே தீயோராய் நடந்துகொண்டனர். இவற்றை இதிகாசம், புராணம் வழியாகவும், நம் மூதாதையரின் அனுபவங்களாலும் அறியலாம். ஆனால் தற்சமயம், நம்மில் மிகச்சிலரையே, சில கால அளவு வரைமட்டுமே நல்லவர் என அடையாளம் காட்டமுடிகிறது. சில காலங்களுக்குள்ளாகவே அவர்தம் ரூபத்தை மாற்றிக்கொள்கிறார். அதற்கு ஒப்புசப்பற்ற காரணங்கள் வேறு… தவறு செய்வது மனித இயல்பே […]

உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

28/08/2017 Sujatha Kameswaran 2

  முற்கால மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக முறைபடுத்திக் கொண்டனர். காலையில் எழுவது முதல், இரவு உறங்கும் வரையில் அவர்கள் கடைபிடித்த அனைத்து விஷயங்களுமே பெரும்பாலும் அவர்தம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்பயப்பதாகவே அமைந்தது. அதிகாலையில் எழுதல் (இன்று, அதிகாலை நேர வேலை என்றால் ஒழிய பெரும்பாலோர் எழுவதில்லை). பல்தேய்க்க வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியை உபயோகித்தல். பல்வலி எனில் லவங்கம், உப்பு என இயற்கை முறை வைத்தியத்தையே மேற்கொள்ளல். (இன்று அவை […]

இந்தியாவின் நிலை?!

27/04/2017 Sujatha Kameswaran 0

விளைப்பொருட்களின் பயன்பாடுதான் இப்படி என்றால், மனித வளம் பெரும்பாலும் இழிவு மற்றும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கூலித்தொழிலாளி முதல் குபேரன் வரை தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் வாழ்கின்றனர். இதனாலேயே தனிமனித உழைப்பும், மரியாதையும் இல்லாமல் முகத்தின் முன்னால் ஒன்றும், முதுகின் பின்னால் மற்றொன்றும் நிகழ்கின்றன. சிறு பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை தரம் குறைவாகவும் சிறு தொழில் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்திலும் பெரும்பாலும் தரம் குறைவு. பணம் […]

இந்தியாவின் நிலை!?

26/04/2017 Sujatha Kameswaran 0

அழகிய நிலப்பரப்பு, செழிப்பான வளங்கள் திறமைமிக்க மக்கள் என இவை அனைத்தையும் கொண்டது இந்தியா. ஆனால் இவையெல்லாம் படிக்கவும் பேசவும் இனிமையாய் அமையும் வார்த்தைகள். தலைப்பின் குறிகள் மூலமே இந்தியாவின் நிலையை அறியலாம். ஒன்று, ஆச்சர்யங்களை (நல்ல வகையில்) அழகுடன் விளங்கிய இந்தியா இன்று கேள்விக்குறியுடன் திகழ்கின்றது. இரண்டு, தன்னிகரில்லாமல் நிமிர்ந்த நிலையில் இருந்த இந்தியா இன்று அனைவருக்கும் அனுசரித்து வளைந்து தன்னிலையை கேள்விக்குறியாய் கொண்டுள்ளது. உதாரணமாக, இயல்பான இயற்கையை […]

கண் தானம்

08/02/2017 Sujatha Kameswaran 0

கண் தானம் உடலுறுப்புகளின் தானம் பற்றி எண்ணற்ற செய்திகள் பரவிவருகின்றன. மேலும் அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடந்தவண்ணம் உள்ளன. இவை எல்லாம் மனிதாபிமானத்திற்காகவும், சில புண்ணியத்திற்காகவும், சில பணத்திற்காகவும், மேலும் சில மண்ணிற்கோ, நெருப்பிற்கோ போவது சக உயிரினத்திற்கு பயன்பட்டால் நல்லதுதான் என தத்துவ ரீதியாகவோ செய்யப்படுகின்றன. ஆனால் பக்தியினால் தூய தொண்டுள்ளத்தால் முதன்முதலில் உறுப்பு தானம் பக்தி இலக்கிய காலத்தில்  நடைபெற்றது. உடலுறுப்பு தானம் அதிலும் […]

இருவழியொக்கும் சொல்(Palindrome)

30/01/2017 Sujatha Kameswaran 0

இருவழியொக்கும் சொல் (Palindrome) இருவழியொக்கும் சொல்(Palindrome) என்பது இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வாசித்தால் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். இது மாலைமாற்று என்ற சொல் மூலமும் அறியப்படுகிறது. இதன் ஆங்கிலப்பெயர் Palindrome என்பது கிரேக்க வேர் சொல்லிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில்: level, civic, pop, noon, refer, madam, mam, radar, […]

ஸ்ரீ சக்கரம்

15/01/2017 Sujatha Kameswaran 0

ஸ்ரீ சக்கரம் சமதளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீ சக்கரத்திற்கு ‘பூப்ரஸ்தாரம்’ என்று பெயர். காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரம் “பூப்ரஸ்தாரம்” ஆகும். தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்ப்பவை ‘அர்த்த மேரு’ எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் “அர்த்த மேரு” உள்ளது. ஸ்ரீ சக்கரத்தில், நீள அகலங்கள் மட்டும் அல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது […]

1 14 15 16 17 18 32