கல்யாணம் மற்றும் சுபநிகழ்ச்சி பாடல்கள்

13/10/2019 Sujatha Kameswaran 0

போஜனம் செய்ய வாருங்கள் மீனாட்சி சுந்தரேசர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் நவசித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கள் வாழைமரத்துடன் வெட்டிவேர் கொழுந்து மாவிலை தோரணம் பவள ஸ்தம்பம் நாட்டிய கூடம், பச்ச மரகதம் பதித்த சுவர்களும் பசும்பொன் தரையில் பலவர்ணப் பொடியினால் பதித்த கோலத்தில் நட்ட நடுவே குத்து விளக்கேற்றி தூண்கள் தோறும் தூண்டா விளக்கும் சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய பந்தி பந்தியாய் பாயை […]

வீட்டுக் குறிப்புகள்

17/09/2019 Sujatha Kameswaran 0

 புத்தகம், தரை இவற்றில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே கோலமாவை எண்ணெய் சிந்திய இடத்தில் தூவிவிட்டு சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை அகன்றுவிடும்.  வேலைப்பாடுகள் நிறைந்தப் பொருட்களை காட்டன் பட்ஸ் கொண்டு துடைத்தால் எளிதில் அதில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கும். க்ரைண்டரில் குழவி வைக்கும் ஸ்டாண்ட் வளையத்தில் கூடைப்போடப் பயன்படும் ஒயரை சுற்றி வைத்தால் துருபிடிக்காமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைக்கப்பயன்படுத்துவதனால் […]

கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்களின் பங்கு

12/09/2019 Sujatha Kameswaran 0

நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், கற்பிக்கிறோம். கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில்-நம் சிந்தையில் ஏற்றுக்கொள்ளல் ஆகும். பார்த்தல், கேட்டல், படித்தல் மற்றும் எழுதுதல் என்பதன் வாயிலாக விஷயங்களை எண்ணத்தில் சீர்தூக்கிப்பார்த்து நிறுத்திக்கொள்வதே சிறந்த கற்றலாகும். காதில் ஏற்பதெல்லாம் கற்றல் ஆகாது. கற்பதற்கு பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுதும் திறன் […]

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]

உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

25/07/2019 Sujatha Kameswaran 0

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]

தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]

ஜனநாயகம்

18/04/2019 Sujatha Kameswaran 0

அனைவருக்கும் உண்டு ஜனநாயகக் கடமை. தனிமனித ஒழுக்கத்தை அடித்தளமாகக்கொண்டது இது. மனித உணர்வுகளை மதிக்கத்தெரிந்ததை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு. மேலும் தான் யார் என்பதை உணர்ந்து, பிறருக்கும் உணர்த்த ஏதுவாய் அமையும் தருணம். தெளிவான எண்ணத்துடன், பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து திடமான முடிவினை எடுக்கும் திறன் இவைகளை அறிய உதவும் தருணம் ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது ஏற்படும். வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனங்களின் கடமை உணர்வு !

பிரஹ்ம முஹூர்த்தம்

18/03/2019 Sujatha Kameswaran 0

பிரஹ்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-ஆவது அத்யாயங்களில், பிரம்ம முஹூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46-இல் பிரம்மமுஹூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம், அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை […]

மொழிகளின் மகத்துவம்

06/03/2019 Sujatha Kameswaran 0

மொழி என்பது ஒருவரை மற்றவரோடு இணைப்பது. கருத்துக்களை எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க ஏற்பட்டது. இந்த மொழியானது முதலில் சைகையில் ஆரம்பித்து பின் பேச்சு வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் மேம்பட்டது. இன்றளவும் இம்மூன்று முறைகளும் வழக்கில் உள்ளன. ஆனால் சில மொழிகள்தான் வழக்கில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. உலகில் பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரவர் தத்தம் தேவைகளுக்கேற்ப மொழிகளைக் […]

பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]

1 13 14 15 16 17 32