ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா.
அல்லல்போம் வல்வினைப்போம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாதுயரம்போம் – நல்ல
குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
Leave a Reply