பெண் தெய்வங்களை வழிபடும் முறைமை ஹிந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் சிறப்பம்சமாகும்.
பலரும் பெண்தெய்வங்களைக் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டுவருகின்றனர்.
பெண் தெய்வங்களையும், தெய்வப்பெண்களையும் வழிபடுவது ஹிந்து மதத்தின் உயரிய நிலையை உணர்த்துகிறது.
பெண் தெய்வங்கள்
தெய்வங்களில் பெண்பாலினத்தோர்களே இங்கு பெண் தெய்வங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உதாரணமாக,
பார்வதீ/உமை/சக்தி/அம்மன் – எனப்பல பெயர்களைக்கொண்ட ஈசனின் மனைவி
மஹாலக்ஷ்மீ/தாயார்/அம்பாள் – எனப்பல பெயர்களைக்கொண்ட திருமாலின் மனைவி
சரஸ்வதீ/வாக்தேவீ/வாணீ – எனப்பல பெயர்களைக்கொண்ட பிரம்மாவின் மனைவி
எனப்பல பெண்தெய்வங்களையும்,
தெய்வப்பெண்கள்
பூமியில் பெண்களாய்ப்பிறந்து தங்களது பூர்வ புண்ணியத்தினாலும், அவரவர்களின் வாழ்வியல் நன்னெறிகளாலும் தெய்வங்களாகப் போற்றப்படுபவர்கள் இங்கு தெய்வப்பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உதாரணமாக
சீதா, மாரியம்மன், மண்தோதரி, அகல்யா, திரௌபதீ, அருந்ததீ, ஆண்டாள், கண்ணகி எனப்பல தெய்வப்பெண்களையும் இன்றளவும் அனைவரும் வழிபட்டுவருவதைக் காணலாம்.
இத்தெய்வப்பெண்களின் வரலாற்றைப்படித்து, அவற்றினுள் பொதிந்துள்ள நன்னெறிகளை உணர்வதன்மூலம் இப்பெண்கள் தெய்வப்பெண்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததன் சிறப்பை அறியமுடியும்.
Leave a Reply