சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும்.
சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் வைத்த, அப்புத்தகங்களையும், அலுவலகத்திற்கான கருவிகளை எடுத்து இறைவனின் பூரண ஆசிர்வாதங்களுடன் அவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும். இவ்வாறு செய்வது, மேற்கொண்டு வரும் காலங்களில், படிப்பிலும், வேலையிலும் நல்முன்னேற்றங்களை அளிக்கும் என்பது ஆன்றோர் நம்பிக்கையும் வாக்கும் ஆகும். நம்பிக்கையோடு எவ்வித நற்செயலை செய்தாலும், அது சிறந்த பலனை அளிக்கும்.
துர்கா லக்ஷ்மீ சரஸ்வதி தேவிகளுக்கு நமஸ்காரங்கள்.
அனைவருக்கும் மனநிறைவும் நல்முன்னேற்றமும் கிடைக்க இறையருள் புரியட்டும்.
Leave a Reply