
கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே.
கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகப் பெருமானின் திருவடியை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம்.
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
நம்மைப் பெற்ற தாயும் தந்தையும் நாம் முதலில் அறிந்துகொண்டு வணங்கவேண்டிய தெய்வங்கள் ஆவர்.
Leave a Reply