
ஆத்திசூடி
101. வித்தை விரும்பு – நல்ல பல கலைகளை விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டும்.
102. வீடு பெற நில் – முக்தி அடைவதையே குறிக்கோளாக்க் கொள்ளவேண்டும்.
103. உத்தமனாய் இரு – நேர்மையாகவும், நல்ல குணத்தோடும் இருக்கவேண்டும்.
104. ஊருடன் கூடி வாழ் – ஊர் மக்களோடு சேர்ந்து வாழவேண்டும்.
105. வெட்டெனப் பேசேல் – கடுமையான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.
Leave a Reply