
எண்ணங்கள் வண்ணங்கள்
பயமும் அச்சமும்:
வாழ்க்கையில் பயம் இருக்கலாம், ஆனால் பயமே வாழ்வாகக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் பயப்படவோ, அச்சமடையவோ ஆரம்பித்தால், எதனையும் சரியாகச் செய்யமுடியாது. தொடங்கிய நிலையிலேயே அது முடிவடைந்துவிடும்.
செயலைத் தொடங்கும்போதோ அல்லது இடையிலோ ஏற்படும் தயக்கம் வேறு, அச்சமயம் தோன்றும் பயம் என்பது வேறு. தயக்கம் என்பது செயலின் போக்குக்கேற்ப தானே நீங்கிவிடும். ஆனால் செயல் குறித்த பயம், செயலிற்கான உற்சாகத்தைக்குறைத்துவிடும். நாம்தான் இவற்றை முயற்சியெடுத்து நீக்கிக்கொள்ளவேண்டும்.
தவிர்க்கமுடியாமல் ஏதேனும் பயம் அல்லது அச்சம் நமது செயல் குறித்து தோன்றினால், அதனை சரிபடுத்த சில தீர்வுகள் உள்ளன.
முதலில் நமது அச்சம் என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும். பின்னர் அவ்வச்சம் எந்தவகையில் செயலுடன் தொடர்புடையது என்பதனை தெரிந்துகொள்ளவதுடன், செயலை பாதிக்காதவண்ணம் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்பது இழுக்கு. (திருக்குறள் -467)
என்கிற குறளுக்கேற்ப செயலை செய்யத்துணிந்தபின் அதைக்குறித்து தயக்கத்துடன் அச்சத்துடன் சிந்தித்தல் ஆகாது.
மேற்கூரிய தகவல்களை சரிபார்த்தாலேயே, அச்சம் நீங்கி புதுத்தெளிவு பிறக்கும். மேலும் தெளிவிற்கு நம் நலனில் அக்கரையுள்ள, நமது செயல் குறித்த அறிவுள்ளவர்களிடம் கலந்தாலோசிக்கலாம்.
பயமும், அச்சமும் நிரந்தரமானவையல்ல என்ற தெளிவு அவசியம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply