
ஆத்திசூடி
71. நூல் பல கல் – அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப்படிக்கவேண்டும்.
72. நெற்பயிர் விளை – உயிர்களின் பசியைப்போக்கும் தானியவகைகளை அதிகமாக
விளைவிக்கவேண்டும்.
73. நேர்பட ஒழுகு – எப்பொழுதும் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.
74. நைவினை நுணுகேல் – இழிவான செயல்களைச் செய்யாமல் இருத்தல் வேண்டும்.
75. நொய்ய உரையேல் – பிறர் மனம் நோகும்படி பேசக்கூடாது.
Leave a Reply