
ஆத்திசூடி
66. நன்மை கடைப்பிடி – நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும்.
67. நாடு ஒப்பன செய் – நாட்டு மக்கள் ஏற்கக்கூடியவைகளை செய்யவேண்டும்.
68. நிலையில் பிரியேல் – இருக்கும் நிலையிலிருந்து உயரவேண்டும். தாழ்ந்துவிடக்கூடாது.
69. நீர் விளையாடேல் – ஆழமான நீர் நிலைகளில் விளையாடக்கூடாது.
70. நுண்மை நுகரேல் – நோய்களைத் தரும் சிறு தீனிகளை உண்ணக்கூடாது.
Leave a Reply