
ஆத்திசூடி
56. தானமது விரும்பு – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
57. திருமாலுக்கு அடிமை செய் – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல
செயல்புரியவேண்டும்.
58. தீவினை அகற்று – பிறர்க்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் – துன்பம் என்ற எண்ணத்திற்கு மனதில் இடம் தரக்கூடாது.
60. தூக்கி வினைசெய் – நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி, செய்யத் தக்கவற்றை மட்டும் செய்யவேண்டும்.
Leave a Reply