
எல்லா உயிரும் இன்பமெய்துக,
எல்லா உடலும் நோய்தீர்க,
எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.
-மகாகவி பாரதியார்
எண்ணங்கள் வண்ணங்கள்
ஆரோக்கியமும் செயல்பாடும்:
மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் உடல் ஆரோக்கியமும் பெரும்பங்கு வகிக்கிறது. மனசோர்வு எவ்வாறு நம் எண்ணங்களை பாதிக்குமோ, அதேபோல் உடல் சோர்வும் பாதிக்கும்.
வெற்றிக்கான சிறப்பம்சம் மனம் உடல் இரண்டையும் சார்ந்துள்ளது. உடல் சார்ந்த உற்சாகம் ஒரு பகுதியையும், மனம் சார்ந்த உற்சாகம் பெரும் பகுதியையும் வகித்தால், செயலில் வெற்றி நிச்சயம்.
உடற்கூற்றில் உபாதைகள் உள்ளவரும், மாற்றுதிறனாளிகளும், தங்களது உடலின் பங்கு ஒரு பகுதியாய் இருப்பினும், உள்ளத்தினால் பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
அவர்களது மனத்திடம் அவர்களை எடுத்த செயலில் வெற்றிபெறவைக்கிறது. நெஞ்சுரமே பாதி வெல்லும். ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்’ என்ற பாரதியாரின் பாடலுக்கிணங்க, திடமான மன உறுதி எதையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தது.
உடல்வலிமை இல்லாதவர் பலரும் ஒரு நாட்டையே நிர்வகிக்கும் யோசனைகள் கூறவல்ல அறிவு-எண்ணத்திடம் வாய்ந்தவர்களாய் இருந்ததை வரலாறு உரைக்கும்.
உடல் ஆரோக்கியத்துடன், உள்ளத்தின் ஆரோக்கியத்தையும் சிறப்பாய் வைத்துக்கொள்வதனால் எளிதில் இலக்கை அடையலாம்.
எண்ணங்கள் தொடரும்….
Leave a Reply