
ஆத்திசூடி
41. கொள்ளை விரும்பேல் – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும். 42. கோதாட்டு ஒழி – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும்.
43. கௌவை அகற்று – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ விலக்கவேண்டும்.
44. சக்கர நெறி நில் – அரசாங்கத்தின் சட்டங்களை மீறாமல் வாழவேண்டும்.
45. சான்றோர் இனத்து இரு – நல்ல அறிவுடையோருடன் சேர்ந்து வாழவேண்டும்.
Leave a Reply