
ஆத்திசூடி
36. குணமது கைவிடேல் – நல்லபண்புகளை ஒருபோதும் விடாமல் கடைபிடிக்கவேண்டும்.
37. கூடிப் பிரியேல் – நல்லவர்களுடன் பழகி, பின் அவர்களை விட்டுப் பிரியாமல் இருத்தல் நலம்.
38. கெடுப்பது ஒழி – பிறரைக் கெடுக்கும் எண்ணங்களையும், செயல்களையும், அழித்துவிடவேண்டும்.
39. கேள்வி முயல் – அறிஞர்கள், சான்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிய எப்போதும் முயற்சி செய்யவேண்டும்.
40. கைவினை கரவேல் – கைத்தொழில்களை மறைக்காமல் பிறர்க்கும் கற்றுத்தரவேண்டும்.
Leave a Reply