
ஆத்திசூடி
11. ஓதுவது ஒழியேல் – நல்ல நூற்களைக் கற்பதை ஒருபோதும் கைவிடக்கூடாது.
12. ஒளவியம் பேசேல் – பொறாமையால், பிறரின் வளர்ச்சியைத் தவறாகப் பேசக்கூடாது.
13. அஃகம் சுருக்கேல் – தானியங்களைக் குறைவாக எடைப்போட்டு பிறரை ஏமாற்றி வியாபாரம் செய்யக்கூடாது. 14. கண்டொன்று சொல்லேல் – கண்ணால் பார்க்காத எதையும், உண்மையென பேசிக்கொண்டிருத்தல் கூடாது.
15. ‘ங’ப்போல வளை – பிற எழுத்துக்களை முன்னும் பின்னும் சேர்த்துக் கொள்ளும் ‘ங’ என்ற எழுத்தைப்போல, பிறரோடு வளைந்து கொடுத்து வாழ்தல் நலம்.
Leave a Reply